Ads (728x90)

2022 ஆம் ஆண்டுக்கான லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் பொருட்களைப் பொதி செய்து வழங்கும் நடவடிக்கை 14 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இந்தப் பொதியை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதன்படி 10 கிலோ சுப்பர் சம்பா, 1 கிலோ வெள்ளைச்சீனி, 1 கிலோ சிவப்பு பருப்பு, 1 கிலோ இடியப்ப மாவு, 500 கிராம் நெத்தலி, 400 கிராம் நூடில்ஸ், 400 கிராம் உப்பு, 2 தேங்காய்ப்பால் பக்கெற் (330 மி.லீ.பக்கெற்), 100 கிராம் மிளகாய் தூள், 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் தேயிலை, 80 கிராம் பொடி லோஷன், 100 கிராம் சதொச சந்தன சவர்க்காரம், 100 மி.லீ. கை கழுவும் திரவம், 90 கிராம் சோயா மீற், சதொச சலவை சவர்க்காரம் என்பன இப்பொதியில் அடங்கியுள்ளன. நுகர்வோர் 20 அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட ஒரு பொதியை 3,998 ரூபாவிற்கு பெற முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பொதியில் உள்ளடக்கப்பட்டுள்ள பொருட்களின் விலைகளின் அடிப்படையில் இதன் பெறுமதி 6,221 ரூபாவாகும். எனினும் சதொச ஊடாக இதனை 3,998 ரூபாவிற்கு பெற்றுக் கொள்வதன் மூலம் நுகர்வோருக்கு 1,750 ரூபா இலாபம் கிடைக்கப் பெறுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் இல்லாத பிரதேசங்களில் உள்ள மக்கள் 1998 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தமது பொதிகளை வீடுகளுக்குப் பெற முடியும் என அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget