அடுத்த வாரம் முதல் இவ்வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 5 வாட், 10 வாட் மற்றும் 15 வாட் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன் இவை இலவசமாக நிறுவிக்கொடுக்கப்படவுள்ளன.
மேலும் சுமார் 5 வாட் சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1,500 ரூபா வழங்கப்படவுள்ளது. அவர்கள் சுமார் 10 வருடங்களின் பின்னர் 10,000 ரூபாவை பெற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் ஒவ்வொரு குடும்பத்தை தெரிவுசெய்து 14,000 வீடுகளுக்கு 5 வாட் மற்றும் 10 வாட் மின்வலு கொண்ட சூரிய மின் தொகுதிகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment