காணியற்ற வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வர்க்க குடும்பங்களுக்குக் நிரந்தர வீடுகளை வழங்கும் நோக்கில் ‘சொந்துரு மல்ஹல் நிவச’ என்ற வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய நடுத்தர வருமானம் ஈட்டுவோருக்கு மலிவு விலையில் வீட்டுத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இந்த வீடமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குக் கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணப் பொருட்கள் கைத்தொழில் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு திட்டமிட்டுள்ளதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இந்தத் திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்கள் முற்கொடுப்பனவாக 5,00,000 ரூபா செலுத்த வேண்டும். வீட்டின் பெறுமதிக்கேற்ப மேலதிக பணத்தை வருடத்துக்குள் தவணை முறையில் அறிவிடுவதற்கும், அவசியமானோருக்கு வங்கி மூலம் கடன் பணம் பெற்றுக் கொடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான ரணபொகுணகம காணியில் 72 வீட்டுத் தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
Post a Comment