Ads (728x90)

ஜனாதிபதியின் சௌபாக்கியா தொலை நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் அரச சேவையில் உள்ளீர்ப்பு செய்யப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் பணிகள் இன்று ஆரம்பமாகின்றது.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென அமைச்சரவை உபகுழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

உயர்கல்வி கற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக இந்த நிரந்தர நியமனம் வழங்கப்படுகின்றது.

53 ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகள் தற்போது அரச நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களில் ஒருவருடப் பயிற்சிக் காலத்தினை நிறைவு செய்த 42,500 பேருக்கு இன்று முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

மேலும் கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்பிரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget