ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவ நிர்வாகம், தாய் நாட்டின் மீதுள்ள பற்று மற்றும் அவரது கடந்த காலம் முதல் இன்று வரையான களங்கமற்ற இருப்பை அடையாளப்படுத்தும் வகையில் நேற்று பிற்பகல் இக்கௌரவ விருது வழங்கப்பட்டது.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காகச் செலவிடப்பட்ட காலத்தை விட அதிகளவான காலம் எஞ்சியுள்ளதால் எதிர்வரும் மூன்று வருடக் காலத்தைச் சிறப்பான முகாமைத்துவத்துக்கு உட்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மஹா சங்கத்தினரின் ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது என இந்நிகழ்வின் பிரதான சொற்பொழிவை நிகழ்த்திய கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் பிரதமப் பதிவாளரும்,பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் துறையின் தலைவருமான அக்கமஹா பண்டித பேராசிரியர் அதி வணக்கத்துக்குரிய கொடபிட்டியே ராஹுல அனுநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
Post a Comment