Ads (728x90)

இன்று முதல் நாடு முழுவதும் நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

நாட்டில் நாளாந்தம் 01 தொடக்கம் 21/2 மணித்தியாலங்கள் வரையிலான மின்வெட்டை அமுல்படுத்துமாறு மின்சக்தி, எரிசக்தி அமைச்சுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் பி.டபிள்யு. கென்டகேவா இந்த தீர்மானத்தை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவுக்கு அறிவித்து உடனடியாக அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி காலை 11 மணி முதல் மாலை 06 மணி வரைக்குள் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை உச்ச நேரங்களில் 45 நிமிடங்களுக்குள் இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடி காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் வழங்குவதில் இருந்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் மூன்றாவது அலகு மற்றும் கெரவலப்பிட்டி யுகதனவி ஆலையின் ஒரு பகுதி பராமரிப்புக்காக மூடப்பட்டமை மற்றும் களனிதிஸ்ஸ 115 மெகாவோட் எரிவாயு விசையாழி ஆலையில் ஏற்பட்ட பழுதினால் மின்வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget