Ads (728x90)

இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ அவர்களை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று அலரி மாளிகையில் சந்தித்துள்ளார்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்திற்கு மேலும் ஒத்துழைத்தல், துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கான முதலீடுகளை ஈர்த்தல், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே சுற்றுலாத்துறையை மேம்படுத்தல், இலங்கையின் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கும், சீனாவிற்கும் இடையே பௌத்த மற்றும் கலாசார உறவினையும், ஒத்துழைப்பையும் மேம்படுத்துவது குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவுசெய்வதற்காக மீண்டும் சீனாவிற்கு செல்வதற்கு எதிர்பார்த்திருக்கும் இலங்கை மருத்துவ மாணவர்களுக்கு சீனாவிற்கு வருகைத்தருவதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்குமாறும் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.

அதற்கு பதிலளித்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வேங்க் யீ, இலங்கையின் மருத்துவ மாணவர்களுக்கு மீண்டும் அங்கு வருகைத்தருவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு வெளியுறவுத்துறை அமைச்சுடன் நெருக்கமாக செயற்படுமாறு இலங்கைக்கான சீன தூதுவருக்கு உடனடியாக அறிவுறுத்தினார்.

இச்சந்திப்பினை தொடர்ந்து பின்வரும் உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டன.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை

கொழும்பில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான மானிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

சிறுநீரக நோய்க்கான நடமாடும் பரிசோதனை அம்பியுலன்ஸ்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கான திட்டத்தை ஒப்படைக்கும் சான்றிதழ்

சீன-இலங்கை இருதரப்பு உறவின் 65 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget