Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் முகமாக கொழும்பில் இருந்து 08 பேர் பயணம் செய்யக் கூடிய உல்லாச படகு ஒன்று குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள தீவுகளை சுற்றிப்பார்க்கும் உல்லாச பயணிகள் குடும்பமாகவோ அல்லது தனித்தனியாகவோ படகிலே தங்கி நின்று தீவுகளை பார்வையிடக் கூடிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர் தொழிலதிபர் மனோகரன் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் 30 மற்றும் 100 அறைகளைக் கொண்ட உல்லாசக் கப்பல் யாழ்.மாவட்டத்துக்கு கொண்டுவரப்பட உள்ளதாகவும் இதன் மூலம் வடக்கின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget