சிவில் சமூக ஆர்வலரான நாகாநந்த கொடித்துவக் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கல்வி அமைச்சர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நாட்டிலுள்ள கொவிட்-19 தொற்று சூழ்நிலையால் தேர்வு எழுதும் மாணவர்களால் பாடத்திட்டங்களை உள்ளடக்க முடியவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். பாடத்திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை என்பதை கல்வி நிபுணர்களே முன்னிலைப்படுத்தியுள்ளதாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே உயர்தரப் பரீட்சையை குறைந்தபட்சம் 20 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment