Ads (728x90)

பெப்ரவரி மாதத்திற்குள் சுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதத்தில் சுமார் 100,000 – 125,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத் தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நாடு வழமைக்குத் திரும்பும் நிலையில் குறைந்தது 200,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும், மத்திய கிழக்கு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனவரி முதல் டிசம்பர் வரை சுமார் 180,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்ததாகவும், அதில் 86,000 பேர் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget