Ads (728x90)

நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார அழுத்தத்தை குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விசேட பொருளாதார நிவாரணப் பொதியொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சகல அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மாதாந்தம் ரூபா 5,000 விசேட கொடுப்பனவு வழங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

நாட்டில் காணப்படும் பாரிய பொருளாதார நெருக்கடியை குறைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு ஆலோசனைகள் எடுக்கப்பட்டதாக நிதி அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாதம் முதல் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூபா 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 87 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)

ஓய்வூதியதாரர்களுக்கு இம்மாதம் முதல் ஒரு வருடத்திற்கு மாதாந்தம் ரூபா 5,000 விசேட கொடுப்பனவு (ரூ. 40 பில்லியன் மேலதிக ஒதுக்கீடு)

தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் இதே மட்டத்திலான சம்பள அதிகரிப்பை மேற்கொள்வது தொடர்பில் உரிய தரப்பினரிடம் பேச தொழில் அமைச்சுக்கு ஆலோசனை

சமுர்த்தி பயனாளிகளுக்கு மேலதிக கொடுப்பனவாக ரூபா 1,000 மேலதிக கொடுப்பனவு

அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களும் அனைத்து வரிகளிலிருந்தும் நீக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஒரு கிலோ ரூபா 80 வீதம் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா

ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு இம்மாதம் முதல் ரூ. 5,000 கொடுப்பனவு

விவசாயத்துறையை மேம்படுத்த 20 பேர்ச் நிலத்திற்கு குறைவான வீட்டுத் தோட்டத்திற்கு ரூபா 5,000 கொடுப்பனவு. 01- 20 ஏக்கர் நிலத்திற்கு ரூபா 10,000 கொடுப்பனவு

நெல்லின் கொள்வனவு உத்தரவாத விலை ரூபா 50 இலிருந்து ரூபா 75 ஆக அதிகரிப்பு

    இதேவேளை, அதிபர்கள், ஆசிரியர்களுக்கான அதிகரித்த சம்பளத்தையும் இம்மாதம் வழங்க இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானித்ததாக தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget