தமிழகத்தில் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கச்சதீவு உற்சவத்தில் இந்திய பாரம்பரிய மீனவர்கள் 200 பேருக்கு COVID விதிமுறைகளைக் கடைப்பிடித்து கலந்துகொள்வதற்கு அனுமதி வழங்கவேண்டும்.
2. இந்திய படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிப்பதுடன், நல்ல நிலையிலுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவேண்டும்.
3. இலங்கை மீனவர்களின் வசமுள்ள தமிழக மீனவர்களின் விசைப்படகுகள், நாட்டுப் படகுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகையினை மீள் பரிசீலனை செய்தல்.
இதேவேளை கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா கோவிட் நிலைமை காரணமாக இம்முறை தமிழக மக்களின் பங்குபற்றுதல் இன்றி நடைபெறவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
கச்சதீவு உற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பூஸ்டர் டோஸ் ஏற்றிய 500 பேரை மாத்திரமே அனுமதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 10 ஆயிரம் பேர் கச்சதீவு உற்சவத்தில் பங்கேற்பதற்கு கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கொரோனா நிலைமை காரணமாக இந்தியப் பக்தர்களுக்கு இம்முறையும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
Post a Comment