இதுதவிர யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு இருப்பதன் பின்னால் அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன. அதேபோல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையமும் மூடப்பட்டது.
தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதேபோல பலாலி விமான நிலையமும் திறக்கப்படும். தற்போது பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவுபடுத்த வேண்டியுள்ளது.
மேலும் பல விமான சேவைகளுக்கான அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் காரணமாக சற்று தாமதநிலை காணப்படுகின்றது. எனினும் அந்த வேலைகள் முடிந்த பின்னர் விரைவாக பலாலி விமான நிலையம் திறக்கப்படும் என தெரிவித்தார்.
Post a Comment