சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகா சிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம்.
மகா சிவராத்திரி நாளில் சிவ வழிபாடு செய்வதும், சிவ தரிசனம் செய்வதும், நமசிவாயம் சொல்லி ஜெயிப்பதும் மகத்தான பலன்களை தரும் என்பது ஐதீகம்.
தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள் மழை பொழியச் செய்பவர் சிவபெருமான். அதாவது உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. ஆகவே இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.
இந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால் இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்கது மகா சிவராத்திரி நாளாகும்.
Post a Comment