இது தொடர்பில் நிதியமைச்சர், நிதிச் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் உட்பட பொது நிதித்துறைக்கு பொறுப்பான அதிகாரிகள் இல்லாதநிலையில் அரசாங்கம் தொடர்ந்து பணத்தை அச்சடித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் 2020 ஜனவரி முதலாம் திகதி ஆட்சிக்கு வந்ததிலிருந்து 1,774.77 பில்லியன் ரூபா பணத்தினை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டில் ஒரே நாளில் அச்சிடப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இவ்வாறு புதிதாக அச்சிடப்பட்ட பணம் மூலம் இந்த ஆண்டில் இலங்கை நிதிச் சந்தையில் சேர்க்கப்பட்ட மொத்தத் தொகை 432.76 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நேற்றய தினம் ஜனாதிபதியிடமிருந்து பதவியை பொறுப்பேற்றார்.

Post a Comment