Ads (728x90)

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் இணைந்து நேற்று ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுத்துள்ளனர்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் மாணவர்கள் களனி பல்கலைக்கழகத்திலிருந்து பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக ராஜகிரிய பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் வினைத்திறனற்ற நிர்வாகத்திற்கு எதிராக இவ்வாறு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நண்பகல் முதல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget