அதன்படி 05 கிலோ நாட்டரிசி, 05 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குகின்றன.
இந்த நிவாரணப் பொதி 1,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் நுகர்வோருக்கு 700 ரூபா நிவாரணம் கிடைக்கும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை புத்தாண்டு நிவாரணப் பொதியை பெற்றுக் கொள்வதற்காக நேற்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சதொச விற்பனை நிலையங்களின் முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment