பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடைபெற்றது.
342 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய அஸெம்பிலியில் 174 உறுப்பினர்கள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கூட்டணி அரசாங்கத்தில் அங்கம் வகித்த பங்காளிக் கட்சியொன்றின் 7 உறுப்பினர்களும் எதிர்த்தரப்புடன் இணைந்துகொள்வதாக அறிவித்ததையடுத்து, பிரதமர் இம்ரான் கானின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது.

Post a Comment