தொடர்ந்தும் ஐந்தாவது நாளாக காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள இளைஞர்களின் பங்குபற்றுதலுடன், தற்போதைய அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி கடந்த 9ஆம் திகதி முதல் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து பதவி விலகுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Post a Comment