மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக உலக வங்கியிடமிருந்து 10 மில்லியன் டொலர் நிதி கிடைத்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அந்நிய செலாவணி பிரச்சினையால் உரிய முறையில் கடன் பத்திரங்களை திறந்துகொள்ள முடியாமை, மருந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடனுதவியின் கீழ் கடன் பத்திரங்களை திறந்து, மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் நிதியுதவி அல்லது மருந்துகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment