அதன்படி அனைத்து வகையான பெற்றோல் மற்றும் டீசலின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.
இதற்கமைய சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருக்கு 35 ரூபாவினாலும். சகல விதமான டீசல் வகைகளின் விலைகளும் ஒரு லீற்றருகு்கு 75 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி பெற்றோல் 92 ஒக்டென் ஒரு லீற்றரின் புதிய விலை 338 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் புதிய விலை 367 ரூபாவாகவும், பெற்றோல் யூரோ 3 இன் புதிய விலை 347 ரூபாவாகவும், ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 289 ரூபாவாகவும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 327 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Post a Comment