Ads (728x90)

இலங்கையில் ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால் தமிழகம் வந்துள்ள இலங்கை ஏதிலிகளுக்கு தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதியளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள தீவிர பொருளாதார நெருக்கடியால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, தமிழகத்தை நோக்கி இலங்கைத் தமிழர்கள் வருகின்றனர்.

கடந்த மாதம் 22 ஆம் திகதி குழந்தை ஒன்று உட்பட 16 பேர் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். முதலமைச்சரின் ஆலோசனையின்படி அவ்வாறு வரும் இலங்கைத் தமிழர்கள் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு வரும் தமிழர்களுக்கு, ஏற்கனவே தமிழக முகாம்களில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைப் போன்று தற்காலிக புகலிடம் வழங்குவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை வழங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமரிடம், தமிழக முதல்வர் கடிதம் மூலம் கோரியுள்ளார்.

இதுவரை 13 குடும்பங்களைச் சேர்ந்த 39 இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தமிழகம் வந்துள்ளனர். அவர்களில் 11 ஆண்கள், 11 பெண்கள், ஒரு கைக்குழந்தை உட்பட 17 சிறுவர்கள் உள்ளனர். 

Post a Comment

Recent News

Recent Posts Widget