Ads (728x90)

ரி20 உலகக்கிண்ணத்தின் முதலாவது ஆட்டத்தில் நமீபியாவிடம் 55 ஓட்டங்களால் இலங்கை தோல்வியடைந்தது.

நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை களத்தடுப்பை தெரிவு செய்திருந்தது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றது.

164 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்களில் 108 ஓட்டங்களிற்கு ஆட்டமிழந்தது.

பென் ஷிகோங்கோ இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்.  பானுக ராஜபக்ச மற்றும் தசுன் ஷனக ஆகியோர் அதிகபட்சமான 34 ரன்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

கடந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்றில் நமீபியா அணி, அயர்லாந்தை வீழ்த்தியது. இந்த முறை ஆசிய கோப்பை சாம்பியனும், T29 போட்டிகளில் கடைசி 5 ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றதுமான இலங்கை அணியையும் வீழ்த்தியுள்ளனர்.

ஆசியக் கிண்ணத்தில் இலங்கையின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இப்போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் பதும் நிஸ்ஸங்க ஆகியோரால் ஒற்றை இலக்க ஓட்டங்களையே பெற்றனர்.

மெண்டிஸ், நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இலங்கை 3 விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது. தசுன் ஷனக மற்றும் பானுக ராஜபக்ச ஆட்டத்தின் போக்கை திருப்ப முயன்ற போதிலும் அது பலனளிக்கவில்லை.

தசுன் சானக 29, பானுக ராஜபக்ச 20 , தனஞ்ஜய டி சில்வா 12 ஓட்டங்களை பெற்றனர்.

நமீபியாவின் டேவிட் வைஸ் 16 ஓட்டங்களிற்கு 2 விக்கெட்டுக்களையும், பெர்னார்ட் ஷால்ட்ஸ் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget