Ads (728x90)

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஆதரவு தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வசந்த முதலிகே, கல்வெவ சிறிதர்ம தேரர் ஆகியோரை விடுவிக்குமாறும் எதிர்க்கட்சி தலைவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மக்கள் தரப்பில் முற்போக்கான திருத்தம் என்பதால் அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவும் தெரிவித்துள்ளார்.

22வது திருத்தம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். 


Post a Comment

Recent News

Recent Posts Widget