தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த அப்பிள் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்பிள் தோட்டம் தொடர்பான தகவல்களை விவசாயி எம்.பி. லக்ஷ்மன் குமார காமியிடம் கேட்டறிந்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் அப்பிள் தோட்டத்தை பார்வையிட எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அப்பிள் விதை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு புதிய சோதனை மேற்கொள்ளப்பட்டு இரண்டு ஏக்கரில் பயிர்ச்செய்கை ஆரம்பித்ததாகவும், இதன்மூலம் வளமான பழங்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிர்ச்செய்கையை விரிவுபடுத்த தேவையான விதைகளை உற்பத்தி செய்து வழங்க முடியும் எனவும், இலங்கையில் எந்த பிரதேசத்திலும் பயிரிடக்கூடிய வகையில் இந்த விதைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
.jpg)
Post a Comment