Ads (728x90)

வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், சுகாதாரத்துறையில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த அமைச்சரவை, வைத்தியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை ஒரு வருடத்தினால் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வரை அமுலில் இருக்கும். அதன் பின்னர் எனைய ஊழியர்களைப் போன்றே வைத்தியர்களும் ஓய்வு பெறுவார்கள் என அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி 63 வயதை பூர்த்தி செய்த வைத்தியர்கள் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுவர். 62 வயதான வைத்தியர்கள் 63 வயது பூர்த்தியாகும் போது ஓய்வு பெறுவர். 61 வயதான வைத்தியர்கள்  62 வயதை பூர்த்தி செய்யும் போது ஓய்வு பெறுவர். 60 வயதான வைத்தியர்கள் 61 வயதை பூர்த்தி செய்யும் போதும் 59 வயதான வைத்தியர்கள் 60 வயதை பூர்த்தி செய்யும் போதும் ஓய்வு பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


Post a Comment

Recent News

Recent Posts Widget