காலிமுகத்திடலில் பட்டத்தினை பறக்கவிட்டு சட்டத்தரணிகள் ஏற்பாடு செய்திருந்த பட்டம் பறக்கவிடும் நிகழ்வில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அதனை நிறுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் சட்டத்திற்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் கருத்துக்களை முன்வைப்பதற்கு சுதந்திரம் காணப்படுகின்ற நிலையில், அதனையும் மீறி வன்முறையில் ஈடுபட்டால் மாத்திரமே பொலிஸார் ஆர்பாட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இன மற்றும் மத ஒற்றுமையை பாதுகாத்தல், நீதிமன்றிற்கு அவமதிப்பினை தடுத்தல், நாடாளுமன்ற சிறப்புரியை பாதுகாத்தல் ஆகியனவற்றிற்கு எதிராக தூண்டுதலாக செயற்பட்டால் 15.2 அரசியலமைப்பின் சரத்திற்கமைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்.
ஆனால் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஆர்பாட்டத்தினை ஒடுக்குவதற்கோ அல்லது கருத்து மற்றும் மொழி சுதந்திரத்திற்கு கட்டுபாடுகளை விதிப்பதற்கோ எவ்வித அதிகாரங்களும் இல்லை.
எதிர்காலத்தில் நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்க பிரத்தியேக திட்டம் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment