அதன்படி ஓய்வு பெறவுள்ள அரச ஊழியர்கள் தாம் ஓய்வுபெறும் திகதிக்கு மூன்று மாதங்களுக்கு முன் ஓய்வூதிய விண்ணப்பத்தை அனுப்புவது அவசியம் என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால், ஓய்வுபெறும் அரச ஊழியர்கள் ஓய்வூதியப் பலன்களை ஓய்வு பெறும் நாளில் இருந்து வினைத்திறனாக பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு இடையில் 60 வயதை எட்டிய நிலையில் ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 12,000 த்தையும் தாண்டும் என்றும் ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது 60ஆக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கட்டாய ஓய்வு பெறும் வரை பணி நீடிப்புடன், ஓய்வு பெறுவதற்கான விருப்பு வயதும் 55ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போது 60 வயதிற்கு மேல் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் இந்த ஆண்டு டிசம்பர் 31 அல்லது அதற்கு முன் 60 வயதை நிறைவு செய்பவர்கள் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் ஓய்வு பெற வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment