இதற்கிணங்க இனிமேல் புதிதாக சிரேஷ்ட பிரஜைகளுக்கான நிலையான வைப்புக்களை ஆரம்பிப்பது நிறுத்தப்படுவதுடன், தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையான வைப்பை முதிர்வுக்கு பின்னர் அதனை நீடிக்கப்போவதில்லையென்றும் வர்த்தக வங்கிகள் தெரிவித்துள்ளன.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு 15 இலட்சம் உச்ச நிலையான வைப்புக்காக வர்த்தக வங்கிகள் வருடாந்தம் 15% உயர் வட்டியை வழங்கி வந்துள்ளன. சாதாரண நிலையான வைப்புகளுக்கு 15 இலட்சம் ரூபாவை வைப்பிலிடுவதற்கான வட்டி வீதம் தற்போது 23% வீதமாக வழங்கப்பட்டு வருகிறது. அதற்கிணங்க சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்பை இரத்துச்செய்வதன் மூலம் அவ்வாறு வைப்பிலிடுபவர்களுக்கு ஏற்படும் நட்டத்தை இல்லாதொழிப்பதற்காகவே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment