Ads (728x90)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார நடவடிக்கைகளுக்காக ஐவர் மட்டுமே வீடுகளுக்கு செல்ல முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், வீடுகளுக்கு பேரணியாக சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனவே ஐந்து பேருக்கு மேற்படாத குழு மட்டுமே வீடுகளுக்குச் சென்று துண்டு பிரசுரங்களை விநியோகிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேபோன்று வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுகின்றமை தொடர்பிலும் அவர் தகவல் வெளியிட்டார்.

அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மட்டுமே வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்ட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வாகனத்தை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் ஸ்டிக்கர் அல்லது வேறு பிரசாரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget