Ads (728x90)

யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் வெள்ளை ஈ தாக்கத்தால் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். 

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்றைய தினம் கச்சாய் பகுதியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இலங்கையில் 3,000 மில்லியன் தேங்காய் உற்பத்தியை வருடாந்தம் நாம் எதிர்பார்த்தாலும் அதனை விடக் குறைவாகவே கிடைக்கப்பெறுகின்றது.

வெள்ளை ஈ தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தாக்கங்கள், விலங்குகளால் ஏற்படுத்தப்படும் சேதம் என பல காரணிகள் இதில் தாக்கத்தைச் செலுத்துகின்றன. 

2030 ஆம் ஆண்டு 4,200 மில்லியன் தேங்காய்களை வருடாந்தம் உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்குடன் செயற்படவுள்ளோம். 

வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாம் எடுத்துள்ள இந்த முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு அதிகமாகவே தேவை. 

150 இயந்திரங்கள், 150 பணியாளர்களை நாங்கள் இங்கு அழைத்து வந்துள்ளோம். இருப்பினும் ஓர் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆகக் குறைந்தது 4 பேர் தேவை. எனவே எமது ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget