Ads (728x90)

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நேற்று நடைபெற்ற பேருவளை நகர சபையின் ஆரம்பக் கூட்டத்தில் நீதிமன்ற உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த தலைவர் தேர்தல் திறந்த வாக்கெடுப்பாக நடைபெற்றது. 

இதில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியின் 6 உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உப தலைவர் பதவி ஐக்கிய மக்கள் சக்திக்கு வழங்கப்பட்டது. 

16 உறுப்பினர்கள் கொண்ட பேருவளை நகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தி 6 உறுப்பினர்களையும், தேசிய மக்கள் சக்தி 3 உறுப்பினர்களையும் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 7 ஆசனங்களையும் கொண்டுள்ளனர்.

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள கடிதத்தில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget