Ads (728x90)

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் 157 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. 

மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று மாலை 7.30 மணியளவில் நடைபெற்றது, இதில் பாதீட்டுக்கு ஆதரவாக 158 வாக்குகளும் எதிராக 01 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இரண்டு பேர் வாக்களிப்பில் இருந்து விலகினர். 

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிதியமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவால் நவம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

அதன் பின்னர் பாதீடு மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நவம்பர் 08 முதல் 14 வரை 6 நாட்கள் நடைபெற்றது. குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெற்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget