அவ்விமானத்தில் 53 மெட்ரிக் தொன் எடையுள்ள, 110 அடி நீளமான, இரண்டு வழித்தடங்களைக் கொண்ட இரும்பு பெய்லி பாலம் (Bailey bridge) ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளதுடன், இது இந்திய அரசினால் நாட்டிற்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள 10 பாலங்களில் 2வது பாலமாகும்.
இப்பாலம் உட்பட இந்திய விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட பொருட்கள் தொகையை இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இப்பாலம் இந்திய இராணுவ பொறியியலாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு அதிகாரிகளால் இணைந்து நுவரெலியா பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இதற்கு மேலதிகமாக படகுகள், சீனி மற்றும் மின்பிறப்பாக்கிகள் தொகையொன்றும் இந்திய உதவிகளில் அடங்குகின்றன.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலாய அதிகாரிகள் குழுவும் மற்றும் இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவும்ம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமூகமளித்திருந்தனர்.
இதேநேரம் தித்வா சூறாவளியால் சேதமடைந்த சிலாபம் - புத்தளம் வீதியை இணைக்கும் பாலத்தை மீளச் சீரமைக்கும் பணியை இந்திய இராணுவப் படைப்பிரிவின் களப் பொறியியலாளர்கள் இன்று ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து வருகை தந்த இந்த குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாகவும், இன்று காலை 7:30 அளவில் தங்கள் சரக்குகளை இறக்கும் பணிகளை நிறைவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment