Ads (728x90)

ரஷிய அதிபர் புட்டின் 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வந்தார். டெல்லியில் தரையிறங்கியதும் ரஷிய அதிபர் புதினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று புதின் இந்தியப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 

புது டில்லியில் அமைந்துள்ள பாலம் விமானப்படை தளத்தில் அவரது விமானம் தரையிறங்கியதைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் அவரை உத்தியோகபூர்வமாக வரவேற்றனர். ரஷ்ய தலைவருக்கு இந்திய ஆயுதப்படைகளின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

குறித்த மாநாட்டுக்குப் பின்னர் ரஷ்ய அரச தொலைக்காட்சி நிறுவனத்தின் புதிய இந்திய அலைவரிசையை, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் தனியாகச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளனர். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget