இவ்வாறு மீட்கப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குழுவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் அடங்குவதாக சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி இந்தக் குழுவில் 11 இந்தியச் சுற்றுலாப் பயணிகள், 04 தென்னாப்பிரிக்கச் சுற்றுலாப் பயணிகள், 02 ஜேர்மன் சுற்றுலாப் பயணிகள், 02 பிரித்தானியச் சுற்றுலாப் பயணிகள் மற்றும் 02 ஸ்லோவேனிய சுற்றுலாப் பயணிகள் அடங்கியுள்ளனர்.
இந்த சுற்றுலாப் பயணிகள் குழு நேற்று மதியம் உலங்கு வானூர்தி மூலம் கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டனர்.நேற்றைய தினம் வெலிமடை- ரெட்டபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மூன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவுக்கு பின்னர் மண்சரிவில் சிலர் சிக்கியுள்ளதாக பிரதேசவாசிகளால் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதேபோன்ற ஒரு சம்பவம் நிக்கவரெட்டிய பகுதியில் நடந்துள்ளது, அங்கு வெள்ளத்தில் சிக்கிய நால்வர் விமானப்படை மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

Post a Comment