Ads (728x90)

வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள கைதிகள், இன்றைய நாளுக்கான தங்களின் மதிய உணவை கொழும்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

வெலிக்கடைச் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவைச் சேர்ந்த 3,874 கைதிகள் சிறைச்சாலை நிர்வாகத்திடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 750 கிலோ அரிசி, 50 தேங்காய்ப் பால் மாப் பொதிகள், 100 கிலோ கொண்டைக்கடலை, 100 கிலோ கௌபி, 10 கிலோ பயறு, 60 கிலோ சோயாமீட், 100 கிலோ சீனி, 10 கிலோ தேயிலை, 10 கிலோ மிளகாய் தூள், 30 கிலோ உப்பு மற்றும் 100 கிலோ பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்களை கைதிகள் அன்பளிப்பு செய்தனர்.

இந்த உலர் உணவுப் பொருட்கள் வெலிக்கடைச் சிறைச்சாலையின் சிரேஷ்ட அத்தியட்சகர் ரஜீவ் எஸ். சில்வா தலைமையிலான சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளால் இன்று கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து கொழும்பு மாநகர சபையின் பிரதி மாநகர முதல்வர் ஹேமந்த குமாரவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget