வயதெல்லை திருத்தம் செய்யப்பட்டு பரீட்சையை நடத்தி பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரிய ஆரச்சி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியும். அந்த வகையில் நாட்டில் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்கள, ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுடன். அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 40 வயது என்ற உச்ச வயது எல்லையை 45 ஆக இந்த சந்தர்ப்பத்திற்கு மட்டும் செல்லுபடியாகும் விதத்தில் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழக்குத் தீர்ப்பின்படி, அரச சேவையில் உள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகளையும் வயதெல்லையை நிர்ணயம் செய்து ஆசிரிய சேவையில் இணைத்துக் கொள்வதற்கான வயதெல்லையை நிர்ணயம் செய்து தனித்தனியாக பரீட்சைகளை நடத்தி நிலவும் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையில் மூன்றாம் தரத்தில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
Post a Comment