பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற 2026 வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இந்த நாட்டை நாம், மீள கட்டியெழுப்புவோம். எதிர்கால பரம்பரைக்காக சிறப்பான நாடொன்றை இரண்டு வருடங்களில் பெற்றுக் கொடுப்போம்.
மிக மோசமாக செயற்படும் எதிர்க்கட்சியினருக்கு நாம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறோம். எமது முன்னிலையில் நீங்கள் சரியானவர்கள் என்று நிரூபிக்க முற்பட வேண்டாம். நாட்டு மக்கள் முன்னிலையில் அதனை நிரூபித்துக் காட்டுங்கள்.
அரசாங்கத்தை அமைக்க வேண்டுமானால் மக்கள் மனதை வெல்ல வேண்டும். ஆனால் நீங்கள் தற்போது செயற்படும் விதத்தில், அதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தாய் நாட்டுக்கும், மக்களுக்கும் உதவி செய்யுங்கள். அதுவே முக்கியம். உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சியை சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள் எம்முடன் பெரும் ஒத்துழைப்புடன் செயல்படுகின்றனர். குறிப்பாக வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த அவ்வாறான பிரதிநிதிகளை குறிப்பிட முடியும். செல்வம் அடைக்கலநாதன் போன்றோர் அதனை புரிந்து கொண்டுள்ளனர்.
நாம் இந்த சவாலை வெற்றி கொள்வோம். இதற்கான தைரியம் மட்டுமின்றி தயார் நிலையும் இதயம் மட்டுமின்றி மூளையும் உள்ளது.
எம்மிடம் சகோதரத்துவம் உள்ளது. இணைந்து செயற்படும் தன்மை உள்ளது. இன்று தெற்கில் காலி, மாத்தறை உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள ஆயிரக்கணக்கான எம்மவர்கள், முகங்கள் கூட தெரியாதவர்களுக்காக உதவி செய்யப் புறப்பட்டுள்ளார்கள். இந்த நாட்டில் எந்த அரசியல் கட்சி இவ்வாறு வேலை செய்துள்ளது என்பதைக் கேட்க விரும்புகின்றேன்.
இஸ்ரேல் – ஈரான் பிரச்சனையின் போது எமது அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்று கூறினீர்கள். இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையில் எமது அரசாங்கம் வீழ்ச்சி யடையும் என்று கூறினீர்கள். வரி தொடர்பான விடயங்களில் அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்றீர்கள். இப்போது 2028 ஆம் ஆண்டு கடன் செலுத்துவதில் எமது அரசாங்கம் வீழ்ச்சியடையும் என்கிறீர்கள். நாம் கூற விரும்புவது இவை எதிலும் நாம் வீழ்ச்சியடையப் போவதில்லை.
நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை அவசர முன்னுரிமை, தற்காலிக தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு என்ற மூன்று அடிப்படைகளில் முன்னெடுக்கவுள்ளோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையில் சில அடிப்படை ரீதியிலான திட்டங்களை முன்னெடுக்கின்றோம். அவசர முன்னுரிமை, தற்காலிக தீர்வு மற்றும் நிரந்தர தீர்வு எனஅவற்றை முன்னெடுக்கவுள்ளோம். இதன்படி நாம், அவசர மற்றும் தற்காலிக தீர்வுகள் தொடர்பிலேயே முதல்கட்டமாக நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
நாட்டை மீளக் கட்டியெழுப்புதல் என்பது நிரந்தர தீர்வாக அமையும். அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் இருக்கின்றன. இந்நிலையில் வட மாகாணத்தில் யாழ்.மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதிப்புகள் அங்கு மிகவும் குறைவாகும். கிளிநொச்சியில் சில பிரதேசங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தன. வவுனியாவில் சில பிரதேசங்களும் பாதிக்கப்பட்டன.
ஆனால் மன்னார் மற்றும் முல்லைத்தீவிலேயே அதிகளவில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முல்லைத்தீவு நாயாறு பாலம் சேதமடைந்துள்ளது. டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் அதனை சீரமைக்கும் பணிகளை முன்னெடுப்போம். எமது தன்னார்வ குழு உள்ளிட்ட சகல தரப்பினரும் வடக்கில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுகின்றனர் என்றார்.

Post a Comment