Ads (728x90)

தித்வா புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள் 'தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக' அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளன.

பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபனினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 9 ஆம் உப பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி கண்டி, நுவரெலியா, பதுளை, குருநாகல், மாத்தளை, கேகாலை, கம்பஹா, முல்லைத்தீவு, அநுராதபுரம், கொழும்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, மன்னார், புத்தளம், இரத்தினபுரி, மொனராகலை, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, கிளிநொச்சி, வவுனியா,  களுத்துறை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளன.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget