Ads (728x90)

2026 ஜனவரி மாதத்துக்கான வருவாய் இலக்கினை ஏற்கனவே தாண்டி விட்டதாக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கை சுங்கத் திணைக்களம் வருவாயாக 175.4 பில்லியன் ரூபாவை வசூலித்துள்ளது. இது குறித்த மாதத்திற்காக எதிர்பார்க்கப்பட்ட இலக்கான ரூ.160.2 பில்லியனை விட 9.5% அதிகமாகும்.

நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தித்வா சூறாவளி காரணமாக தடைபட்ட கொள்கலன் அனுமதி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டதாலும், 2025 டிசம்பரில் இறக்குமதி நடவடிக்கைகள் அதிகரித்ததாலும் வருவாய் அதிகரிப்பிற்கு பிரதான காரணியாக அமைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு சுங்கத் திணைக்களம் மொத்தமாக 2,551 பில்லியன் ரூபா வருவாயை அடைந்து. இது 2024 ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட ரூ.1,553 பில்லியனுடன் ஒப்பிடும்போது 64.2% அதிகமாகும்.

இந்த நிலையில் வாகன இறக்குமதி குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், 2026 ஆம் ஆண்டிற்கான வருவாய் இலக்காக சுங்கத் திணைக்களம் 2,207 பில்லியன் ரூபாவை நிர்ணயித்துள்ளது.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget