Ads (728x90)

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 53 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 357 ஓட்டங்களை குவித்துள்ளது. இது இலங்கையில் இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டியில் பதிவு செய்த அதிகபட்ச ஓட்டங்களாகும். 

இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 111 ஓட்டங்களையும், ஜேக்கப் பெத்தேல் 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஹாரி ப்ரூக் வெறும் 57 பந்துகளில் சதம் அடித்ததோடு, 137 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இலங்கை சார்பில் வனிந்து ஹசரங்க மற்றும் ஜெப்ரி வென்டர்சே ஆகியோர் விக்கெட்டுகளைக் கைப்பற்றிபோதிலும் ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 

358 என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தோல்வியை தழுவியது.

இலங்கை அணி சார்பில் பவன் ரத்நாயக்க 121 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget