புறநானூறு என்கிற மாணவர் சங்கத்தின் தலைவரான செழியன் (சிவகார்த்திகேயன்) தீவிரமாக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது காவல்துறை அதிகாரியாக இருக்கும் திரு (ஜெயம் ரவி) போராடும் மாணவர் குழுவை எதிர்கொள்கிறார்.
அப்போது பெரிய இழப்பைச் சந்திக்கும் சிவகார்த்திகேயன் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் இருந்து விலகுகிறார். சில ஆண்டுகள் உருண்டோடுகின்றன. தற்போது சிவகார்த்திகேயன் மத்திய அரசு பணியில் உள்ளார். அவரது சகோதரர் சின்னா (அதர்வா) தற்போது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதனால் சகோதரர்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படுகிறது.
இதுதான் படத்தின் கதை. நடிகர்களின் நடிப்பு என்பதையும் தாண்டி இசை மற்றும் இதர தொழில்நுட்ப அம்சங்களும் வெகுவாகப் பாராட்டப்பட்டுள்ளன.

Post a Comment