கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் இத்தகைய தன்னிச்சையான செயற்பாடுகளே புதிய கல்வி மறுசீரமைப்புகளின் சில அம்சங்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினர் பரப்பி வரும் தவறான கூற்றுகளால் பெற்றோர்கள் மத்தியில் தேவையற்ற பீதி ஏற்பட்டுள்ளது. இது மறுசீரமைப்பு செயல்முறையின் மீது பொதுமக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்துள்ளது.
மறுசீரமைப்புகளை அறிமுகப்படுத்தும் எந்தவொரு நிலையிலும் சில குறைபாடுகள் இருப்பது இயல்பானது. ஆனால் அத்தகைய ஒவ்வொரு விடயத்தையும் மறுசீரமைப்பின் தோல்வியாக எதிர்க்கட்சி சித்திரிக்கிறது எனவம் தெரிவித்தார்.
கல்வி மறுசீரமைப்பு ஒத்திவைக்கப்பட மாட்டாது என்பதைத் தெளிவுபடுத்திய அமைச்சர், முன்மொழியப்பட்ட ஐந்து அளவுகோல்களில் நான்கரை அளவுகோல்கள் திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டார்.
தரம் 6 ஆங்கில பாடநெறி (Module) தொடர்பான ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை காரணமாகவே தாமதம் ஏற்பட்டுள்ளது. அவர்களின் சீர்குலைவு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்றும் வலியுறுத்தினார்.
Post a Comment