Ads (728x90)

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்த நான்கு இலட்சம் சாரதிகளுக்கு நிரந்தர அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு கடந்த காலங்களில் தட்டுப்பாடு நிலவியதால் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களே வழங்கப்பட்டிருந்தன.

இந்த நடைமுறையின் கீழ் தற்காலிக அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு தற்போது நிரந்தர அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே 04 இலட்சம் பேருக்கு நிரந்தர அனுமதிப்பத்திர அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு இலட்சம் அட்டைகள் எதிர்வரும் நாட்களில் விநியோகிக்கப்படும்.

எதிர்காலத்தில் சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாமலிருக்க மேலதிகமாக 10 இலட்சம் அட்டைகளை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget