பல்லேகல சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் சாஹிப்சாதா பர்ஹான் அதிகபட்சமாக 63 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்து தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய லியாம் டாசன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி புரூக் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் ஷா அப்ரிடி பந்துவீச்சில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அவரது இந்த அபார சதத்தின் உதவியுடன், இங்கிலாந்து அணி 19.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

Post a Comment