நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான தகுதிவாய்ந்த முதலீடுகளுக்கு இந்த வரிச் சலுகைகள் பொருந்தும்.
தகுதியான திட்டங்கள் குறைந்தது 50 உள்நாட்டு வேலைவாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இத்திட்டங்களுக்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் இறக்குமதிக்கும் வரிச் சலுகைகள் பொருந்தும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Post a Comment