Ads (728x90)

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி வீதத்தை 15% வீதம் வரை அதிகரிக்க அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த உலகளாவிய வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தற்போதுள்ள அமெரிக்க சட்டத்தின்படி 150 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்கு இவ்வாறு 15% வீதம் வரை வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது

இதேவேளை நேற்று அமெரிக்க ஜனாதிபதி இந்த வரி வீதம் 10% வீதமாக இருக்கும் எனத் அறிவித்திருந்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget