Ads (728x90)

தீயணைப்புப் படைப்பிரிவில் பெண்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் தலைமை தீயணைப்பு அதிகாரி பி.டி.கே.ஏ வில்சன் தெரிவித்துள்ளார்.

தீயணைப்புப் படைப்பிரிவில் பெண்களின் தேவை அதிகரித்துள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தீயணைப்புச் சேவையில் பெண்களை இணைத்துக் கொள்வதற்காக சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இதுவரை செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களை ஆட்சேர்ப்பு செய்யும் போது, முதல் கட்டமாக மேல் மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள எட்டு தீயணைப்பு பிரிவுகளுக்கு அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment

Recent News

Recent Posts Widget