Ads (728x90)

அக்குரேகொடையில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரி மொனராகலை, ஹலந்தாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில் பாதாள உலகக் கும்பலால் 10 லட்சம் ரூபாவுக்கு இக்கொலை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் குறித்த சம்பவத்தின் இரண்டாவது துப்பாக்கிதாரிதானா என்பதை உறுதிப்படுத்த, முக அடையாள கண்காணிப்புத் தொழில்நுட்பம் மூலம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னதாக, சம்பவத்தின் முதல் துப்பாக்கிதாரியான முன்னாள் இராணுவ வீரர் கடந்த 21 ஆம் திகதியன்று அம்பலாங்கொடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

12 காவல்துறை குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது 80 வீதமான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget